தமிழாசிரியர்

தமிழாசிரியர்கள் என் மனதில் என்றும் நன்றியுடன் நினைவில் நிற்பவர்கள்.

எங்கள் பள்ளியில், சிறந்த தமிழ் ஆசிரியர்கள் இருந்தனர்.
ஒருமுறை, எட்டாம் வகுப்பு என்று நினைக்கிறேன், காலிறுதி அல்லது அரையிறுதித் தேர்வு, தேர்வுத்தாளில், மதிப்பெண்களைக் கூட்டி, ‘அய்யா, மொத்தம் நூறு மதிப்பெண்கள் வருகிறதே’ என்றேன், அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தவர், ‘அடேய், தமிழுக்கு நூறு மதிப்பெண்கள் போடக்கூடாதுடா’ என்று இரண்டைக் கழித்து 98 ஆக்கினார்.

ஒருமுறை என் தந்தையுடன் மிதிவண்டியில் பின் அமர்ந்து சென்று கொண்டிருக்கையில், தெரு முனையில் எங்களைப் பார்த்தவர், நிறுத்தி ‘உங்க பையனுக்கு கற்பூர புத்தி’ என்று சிலாகித்தார்.

எங்கள் பள்ளியின், ‘ப’ வடிவ இரண்டடுக்கு வளாகத்தில், சுற்றிலும் ஓங்கி வளர்ந்த அசோக மரங்கள் உண்டு.  எங்கள் ‘நல்லப்ப வாத்தியார்’, எங்கள் கடைசி மேசை கழுதைகளின், குறும்பு பொறுக்க முடியாமல், வகுப்பிற்கு வெளியே, முட்டி போட வைத்து, அசோக மரக்கிளைகளைப் பிடுங்கி, எங்கள் மூவர் மீது சாமியாடும் போது, அப்பக்கம் வந்தவர், ‘இவனுங்களா, நல்லா படிப்பானுங்க, அந்தளவுக்கு குறும்பும் பன்னுவானுங்க, இன்னும் ரெண்டு போடுங்க!’ தூண்டிவிட்டு, சாமியாட்டத்தை நின்று ரசித்தார்.

🙏
Advertisements

நெருடல்

சரவணபவனை விட்டு வெளியில் காலடி வைத்தேன்.  ஒரு பெண்மணி, கைக்குழந்தை உறங்கிக் கொண்டிருக்கிறது.  ஓரு அட்டையில் ஏதோ வரைந்து கொண்டிருக்கிறார்.  ‘சரவணபவன் முகப்பில் வரைவதற்க்கு என்ன இருக்கிறது’ என்று எண்ணியவண்ணம், ஊர்தியை நோக்கி நடந்தேன்.

என்னை நிமிர்ந்து பார்த்தவர், ‘ஐயா, உதவி ஏதாவது செய்யுங்கள், வீட்டில் இன்னும் நான்கு குழந்தைகள் உள்ளனர்’ என்றார்.  வரையவில்லை, அந்த அட்டையில், ‘உதவி செய்யுங்கள்’ என்று எழுதிக்கொண்டிக்கிறார்.  பணம் கொடுத்தேன்.

ஊர்தியின் கதவைத் திறக்கும் தருண்ம், குழந்தை உறங்கிக் கொண்டிருந்த தள்ளுவண்டி பார்வையில் பட்டது.  தள்ளுவண்டியின் மேல், ச்டார்பக்சில் வாங்கிய பானகமும்,  உணவுப் பொட்டலமும் இருந்தது.

மனதில் ஒரு நெருடல், பொது இடங்களில் உதவி கேட்கும் நிலைக்கும், இதற்க்கும் ஒரு இடைவெளி.  ‘ஏன், உதவி கேட்டாலென்ன, அந்தப் பெண்மணி இந்த விலையுயர்ந்த பானகத்தையும், உணவையும் சாப்பிடலாகாதா ?’ என்று எனக்கே பதிலளித்துகொண்டேன்.

இருப்பினும், மனதில் ஒரு நெருடல்.

PyCon 2012 – Santa Clara

Attended PyCon 2012 at Santa Clara Convention Center from March 9th thru 11th.  It was a blast, all the team members from work was there, manned the Employer’s booth for couple of hours, attended all the keynotes and a whole bunch of sessions.  Great learning times indeed.  In the booth, we were giving out pins and a t-shirt for successfully solving Python puzzles, it was great to see a whole bunch of people getting all the pins/t-shirt and was a very good feeling to give away things.

Learned that __init__ can be called dunder init , enriching my Python vernacular.

Coping

Coping with an interminable episode of walking pneumonia, my son brought me couple of books of Big Papa.  New, familiar, comforting and longing (for the stories to not end) reads indeed.

The Complete Short Stories of Ernest Hemingway – The Finca Vigia Edition

In particular Part II and III, which were not covered in the Original Short Stories Edition, which is well-weatherd and dog eared of that of a beagle in my book shelf.  One always resonates with few Authors, Hemingway, Sherman Alexia, Thomas King are a few of those Authors for me.

The Old Man and the Sea

My son is trying to get a head start on his literary reading assignments, which has benefitted me quite well.