நெருடல்

சரவணபவனை விட்டு வெளியில் காலடி வைத்தேன்.  ஒரு பெண்மணி, கைக்குழந்தை உறங்கிக் கொண்டிருக்கிறது.  ஓரு அட்டையில் ஏதோ வரைந்து கொண்டிருக்கிறார்.  ‘சரவணபவன் முகப்பில் வரைவதற்க்கு என்ன இருக்கிறது’ என்று எண்ணியவண்ணம், ஊர்தியை நோக்கி நடந்தேன்.

என்னை நிமிர்ந்து பார்த்தவர், ‘ஐயா, உதவி ஏதாவது செய்யுங்கள், வீட்டில் இன்னும் நான்கு குழந்தைகள் உள்ளனர்’ என்றார்.  வரையவில்லை, அந்த அட்டையில், ‘உதவி செய்யுங்கள்’ என்று எழுதிக்கொண்டிக்கிறார்.  பணம் கொடுத்தேன்.

ஊர்தியின் கதவைத் திறக்கும் தருண்ம், குழந்தை உறங்கிக் கொண்டிருந்த தள்ளுவண்டி பார்வையில் பட்டது.  தள்ளுவண்டியின் மேல், ச்டார்பக்சில் வாங்கிய பானகமும்,  உணவுப் பொட்டலமும் இருந்தது.

மனதில் ஒரு நெருடல், பொது இடங்களில் உதவி கேட்கும் நிலைக்கும், இதற்க்கும் ஒரு இடைவெளி.  ‘ஏன், உதவி கேட்டாலென்ன, அந்தப் பெண்மணி இந்த விலையுயர்ந்த பானகத்தையும், உணவையும் சாப்பிடலாகாதா ?’ என்று எனக்கே பதிலளித்துகொண்டேன்.

இருப்பினும், மனதில் ஒரு நெருடல்.

Advertisements